என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » குப்பை கிடங்கு தீ
நீங்கள் தேடியது "குப்பை கிடங்கு தீ"
கோவை மாநகராட்சி குப்பை கிடங்கில் 2 நாட்களாக எரியும் தீயை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை:
கோவை மாநகராட்சியில் குவியும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அங்கு மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிவதும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று 2-வது நாளாக எரிய தொடங்கியது.
இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென்று பரவியது. இதனால் விண்ணை தொடும் அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இன்று காலையும் தொடர்ந்து தீப்பிடித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்காக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது.
தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் ராஜாமணி இன்று காலை வெள்ளலூர் சென்று தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தீயணைப்பு துறை டி.ஜி.பி. காந்திராஜன் நேற்று இரவு கோவை வந்தார். அவர் இன்று காலை வெள்ளலூர் குப்பை கிடங்கு சென்று ஆய்வு செய்தார். இணை இயக்குனர் விஜய சேகர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் 9 மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
9 மாவட்டங்களில் இருந்து 50 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.
மேலும் சூலூரில் இருந்து ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீ பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தீப்பிடித்த வெள்ளலூர் குப்பை கிடங்கை கோவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் குமார் ஜடாவத், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோரும் பார்வையிட்டு பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.

×

X